Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செஸ் போட்டி வரலாற்றில் இதுதான் முதல் முறை: உலக செஸ் சாம்பியன்ஷிப் விளம்பரதாரராக கூகுள்!

செஸ் போட்டி வரலாற்றில் இதுதான் முதல் முறை: உலக செஸ் சாம்பியன்ஷிப் விளம்பரதாரராக கூகுள்!

Mahendran

, வியாழன், 12 செப்டம்பர் 2024 (15:58 IST)
செஸ் போட்டி வரலாற்றில் முதல் முறையாக உலக சாம்பியன்ஷிப் செஸ் போட்டியின் விளம்பரதாரராக கூகுள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நவம்பர் 23 முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. நடப்பு உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரேன், இந்திய வீரர் குகேஷ் உட்பட இந்த போட்டியில் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் இந்த போட்டியின் விளம்பரதாரராக கூகுள் நிறுவனம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூகுள் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறிய போது செஸ் வரலாற்று நிகழ்வில் விளம்பரப்படுத்துவதில் கூகுள் பெருமை கொள்கிறது என்றும் செஸ் மனிதனின் புத்தி கூர்மை தொழில்நுட்ப திறனை அதிகரிக்கும் விளையாட்டு என்றும் கூறினார்.

செஸ் ரசிகர்களுக்கு அனுபவத்தை அளிப்பதிலும் செஸ் போட்டியின் அழகை கொண்டாடுவதிலும் கூகுள் மகிழ்ச்சி அடைகிறது என்றும் அவர் கூறியுள்ளார். முதல் முறையாக உலக அளவில் பிரசித்தி பெற்ற ஒரு நிறுவனம், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை விளம்பரப்படுத்துகிறது என்பது செஸ் விளையாட்டை பொதுமக்கள் மத்தியில் விரிவாக்கம் செய்யும் ஒரு அம்சமாக கருதப்படுகிறது.

Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனி ஆடும் போது அவர் பேட்டில் இருந்து வந்த சத்தம் அவர் யார் என்பதை சொன்னது… ஆரம்பப் போட்டிகளிலேயே கணித்த சச்சின்!