Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு எதுமே தெரியாது... அப்பாவியாய் நிற்கும் கோமதி!

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (17:58 IST)
தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருக்கிறேன் என தங்க பதகத்தை இழந்த கோமதி மாரிமுத்து பேட்டி. 
 
கடந்த ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டபந்தய பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, ஊக்கமருந்து பயன்படுத்தியதாக முதல்கட்ட சோதனையில் தெரிய வந்தது.   
 
கோமதி மாரிமுத்துவின் சகோதரர் சுப்ரமணி, கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி என அப்போது கூறினார். அதன் பின்னர் தற்போது இரண்டாம் கட்ட சோதனையிலும் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. 
 
இதனால் 4 ஆண்டுகளுக்கு அவர் போட்டியில் பங்கேற்க அத்லெடிக் இன்டெக்ரிடி யூனிட் அமைப்பு தடை விதித்துள்ளது. மேலும் தங்கத்தையும் திரும்ப பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருக்கிறேன். நான் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை எடுத்துக் கொள்ளவில்லை. அசைவ உணவில் அந்த வஸ்து இருந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

வயதை குறைத்து சொல்லி ஏமாற்றினாரா வைபவ் சூர்யவன்ஷி?... தந்தை ஆவேசம்!

ஆஸ்திரேலியா தொடருக்கு நடுவே திடீரென இந்தியா திரும்பிய கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments