மும்பையின் ஜவஹர் தாலுகாவின் பாகர் பகுதியில் ஆண்டுதோறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடப்பது வழக்கம்.
இந்த தொடருக்காக ரூ.1 லட்சம் மற்றும் ரூ.50,000 என பரிசுகள் வழங்குவதும் வழக்கமாக இருந்துள்ளது.
ஆனால், கடந்த ஆண்டு நடந்த கிரிக்கெட் தொடரின் போது, பரிசுத்தொகை வழங்கியதில் குழப்பம் ஏற்பட்டு, அது மோதலில் முடிந்தது.
இதனால், இதை தவிர்க்க, இந்த ஆண்டுநடந்த கிரிக்கெட் தொடரில் பரிசாக, ஆடு, சேவல், அவிச்ச முட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, தொடரில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு ஆடுகளும், இரண்டாவது இடம் பிடித்த வீரர்களுக்கு ஐந்து சேவல்களும், சிக்சர், பவுண்டரி விளாசியவர்களுக்கு அவிச்ச முட்டைகளும் வழங்கப்பட்டது.