Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

105 அடி தூரத்தில் இருந்த அடித்த கோல்: கின்னஸ் சாதனை செய்த கோல்கீப்பர்!

105 அடி தூரத்தில் இருந்த அடித்த கோல்: கின்னஸ் சாதனை செய்த கோல்கீப்பர்!
, வெள்ளி, 22 ஜனவரி 2021 (07:39 IST)
105 அடி தூரத்தில் இருந்த அடித்த கோல்: கின்னஸ் சாதனை செய்த கோல்கீப்பர்!
கால்பந்தாட்டத்தில் கோல்கீப்பர் கோல் அடிப்பது என்பது எப்பொழுதாவது அரிதாக நடைபெறும் நிகழ்வாகும். அதிலும் கின்னஸ் சாதனை செய்த கோல்கீப்பர் ஒருவரின் தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
இங்கிலாந்து நாட்டின் கோல் கீப்பர் ஒருவர் 105 அடி தூரத்தில் இருந்து கோல் அடித்து கின்னஸ் சாதனை செய்துள்ளார். நியூபோர்ட் கவுண்டி என்ற அணிக்காக விளையாடிய  டாம்கிங் என்ற கோல் கீப்பர் நேற்றைய போட்டியில் தனது இடத்திலிருந்து சரியாக 105 அடி தூரத்திற்கு பந்தை உதைத்து  மிகச்சரியாக எதிர் அணியின் கோல் கம்பத்தில் விழச்செய்தார்
 
இதனை அடுத்து இது ஒரு உலக சாதனையாக கருதி, இந்த சாதனையை கின்னஸ் ஏற்றுக்கொண்டுள்ளது. 105 அடி தூரத்திலிருந்து கோல் அடித்த இங்கிலாந்து நாட்டின் கோல்கீப்பருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 
 
இது குறித்து கோல்கீப்பர் கூறியபோது எனது இந்த சாதனை எனக்கும் எனது குடும்பத்திற்கும் எனது அணிக்கும் பெருமை தருவதாக உள்ளதால் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’இந்தியாவில் கிரிக்கெட் என்பது’’ . நடராஜனை சுட்டிக்காட்டி ..ஷேவாக் விளக்கம்