Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புஜாரா மேல் நம்பிக்கை இல்லை என்றால் மாற்று வீரர் வருவார்… சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (17:36 IST)
இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வீரரான புஜாராவுக்கு கவாஸ்கர் அறிவுரை வழங்கும் விதமாக பேசியுள்ளார்.

சமீபகாலமாக இந்தியாவின் தற்போதைய சுவர் என சொல்லப்படும் புஜாரா மிகவும் சராசரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆமை வேகத்தில் விளையாடுவது, ஸ்ட்ரைக்கை மாற்றுவது ஆகியவற்றோடு நல்ல பந்துகளையும் விடுவது என அவர் மேல் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இங்கிலாந்து தொடரில் அவர் சிறப்பாக விளையாட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ‘புஜாராவுக்கு அவர் பேட்டிங் மேல் நம்பிக்கை இருக்கலாம். ஆனால் அந்த நம்பிக்கை அணி நிர்வாகத்துக்கு இல்லை என்றால் அவருக்கு பதில் மாற்று வீரர் கொண்டு வரப்படுவார். அவரின் பேட்டிங் சில நேரங்களில் உலகத்தரத்துக்கு இருந்துள்ளது. அவரது பேட்டிங் இந்தியாவில் கைகொடுக்கும். ஆனால் வெளிநாடுகளில் கைகொடுக்குமா எனத் தெரியவில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments