Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேட் கம்மின்ஸ் சவாலுக்கு சைலன்ஸ் ஆக பதிலடி கொடுத்த கவுதம் கம்பீர்.. கொண்டாடும் ரசிகர்கள்..!

பேட் கம்மின்ஸ் சவாலுக்கு சைலன்ஸ் ஆக பதிலடி கொடுத்த கவுதம் கம்பீர்.. கொண்டாடும் ரசிகர்கள்..!

Siva

, திங்கள், 27 மே 2024 (06:21 IST)
ஐபிஎல் தொடர் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் கொல்கத்தா அணி அபாரமாக வென்றது என்றும் போட்டி ஆரம்பித்த முதல் ஓவரில் இருந்து கொல்கத்தா அணி பக்கம் ஆட்டம் திரும்பிவிட்டதை ஐதராபாத் அணி எந்த ஒரு கட்டத்திலும் தங்கள் பக்கம் திருப்ப முயற்சி கூட எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து பேட் கம்மின்ஸ் சவாலுக்கு சைலன்ஸ் ஆக பதிலடி கொடுத்த கௌதம் கம்பீர் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.போட்டி தொடங்குவதற்கு முன்னர் பேட் கம்மின்ஸ் தங்கள் அணியினர் சவாலாக இருப்பார்கள் என்றும் கொல்கத்தா அணியை எப்படி ஜெயிக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்றும் வீராப்பாக சவால் விட்டிருந்தார்.

ஆனால் அதற்கு பதிலடியாக கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது கொல்கத்தா அணி ஆலோசகர் கௌதம் கம்பீர் எந்தவித பதிலும் சொல்லவில்லை. ஆனால் அதே நேரத்தில் பேட் கம்மின்ஸ்க்கு மைதானத்தில் பதிலடி கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட் கம்மின்ஸ் பலவிதத்தில் தனது ஐடியாக்களை மாற்றி விளையாடிய பார்த்த போதிலும் அவரது எந்த ஒரு ஐடியாவும் நேற்று ஒர்க்கவுட் ஆகவில்லை என்பதும் ஆட்டம் முழுமையாக கொல்கத்தா பக்கமே நேற்று இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது .

Edited by Siva

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3ஆவது முறையாக ஐபிஎல் மகுடம் சூட்டிய கொல்கத்தா.!! ஹைதராபாத்தை எளிதாக வீழ்த்தி அசத்தல்..!!