கோலியின் உத்திகள் என்னைத் திருப்திப்படுத்தியதே இல்லை… கௌதம் கம்பீர்!

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (16:22 IST)
கேப்டனாக கோலியின் உத்திகள் தன்னை ஒருபோதும் திருப்தி செய்தது இல்லை எனக் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

உலகக் கோப்பையில் தொடர்ந்து இரு தோல்விகளை சந்தித்துள்ள இந்திய அணி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ரசிகர்களிடம் மட்டும் இல்லாமல் முன்னாள் வீரர்களே விமர்சனங்களை வைக்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் இந்திய அணியின் நியுசிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் திடீரென தொடக்க ஆட்ட ஜோடியை மாற்றியதும் இப்போது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள கௌதம் கம்பீர் ‘கேப்டனாக கோலியின் உத்திகள் என்றைக்கும் என்னைத் திருப்திப்படுத்தியதில்லை. இந்த முடிவுக்கும் தோனிக்கும் சம்மந்தம் இருக்காது. ஏனென்றால் அவர் இதுபோல திடீரென முடிவுகளை எடுக்கமாட்டார். மற்றவர்களும் கோலியின் முடிவுகளைக் கேள்வி கேட்க மாட்டார்கள். அதுதான் பிரச்சனை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா கொடுத்த டார்கெட்.. யாருக்கு வெற்றி?

8 விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணி.. ஜாம்பா, பார்ட்லெட் அபார பந்துவீச்சு..!

அடுத்தடுத்து 2 போட்டிகளில் முதல்முறையாக டக்-அவுட்.. ஓய்வு பெறுகிறாரா விராத் கோஹ்லி?!

மீண்டும் விராத் கோஹ்லி டக் அவுட்.. நிதானமாக விளையாடும் ரோஹித் சர்மா.. இந்தியா ஸ்கோர்..!

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா எடுத்த அதிரடி முடிவு.. தொடரை இழக்காமல் தடுக்குமா இந்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments