கங்குலி இந்திய அணியின் முகத்தை மாற்றியவர் என்ற பெருமை பெற்றவர். கேப்டனாக அவர் 21 டெஸ்ட் போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் கோலியின் கேப்டன்சி பற்றிக் கங்குலி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, கோலி இன்னமும் சவாலுக்கு உட்படுத்தப்படவில்லை, கேப்டனாக அவர் இன்னமும் சோதிக்கப்படவில்லை.
இலங்கை தற்போது வலுவான அணியாக இல்லை. எனவே தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் எப்படி இந்திய அணி கோலி தலைமையில் சிறப்பாக ஆடுகிறது என்பதுதான் கேப்டன்சிக்கான அளவுகோல் என தெரிவித்துள்ளார்.