Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியின் கேப்டன்சி பற்றி புகழ்ந்து பேசிய கம்பீர்…. ரசிகர்கள் ஆச்சர்யம்!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (08:31 IST)
இந்திய அணியின் கேப்டன் கோலியை பற்றி அதிகளவில் விமர்சனம் செய்த வீரராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் இருந்தார்.

இந்திய அணிக்கு மூன்று வடிவங்களிலும் கேப்டனாக கோலி இருந்து வருகிறார். அவர் இல்லாத போது லிமிடெட் ஓவர் போட்டிகளில் ரோஹித் ஷர்மா கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிகளுக்கு அஜிங்க்யே ரஹானே கேப்டனாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் கோலியின் டி 20 கேப்டன்சி பற்றியும் அவரின் அணுகுமுறை குறித்தும் அதிகளவில் கவுதம் கம்பீர் விமர்சித்து வந்தார்.

ஆனால் இப்போது அவர் கோலிக்கு ஆதரவாக பேசியுள்ளார். அதில் ‘நான் எப்போதுமே கோலியின் டி 20 கேப்டன்சி பற்றி மட்டுமே விமர்சனம் செய்துள்ளேன். அவரின் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன்சி என்றும் சிறப்பாக இருந்துள்ளது. அதை நான் குறை கூறவில்லை. அவரின் தலைமையின் கீழ் இந்த போட்டிகளில் இந்தியா சிறப்பாக பிரகாசிக்கும். அவர் மகிழ்ச்சியளிக்கும் விதமாக இப்போது அணி உள்ளது. இப்போது இந்தியா ஓரிருவரை மட்டுமே நம்பி இல்லை. இங்கிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வது மட்டுமே இந்தியாவின் இலக்காக இருக்கும்’ எனக் கூறியுள்ளார்.

கோலியை அதிகமாக விமர்சிக்கும் கம்பீரே இப்படி பாராட்டி இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சி எஸ் கே அணியில் அஸ்வின்? ராஜஸ்தான் முடிவு என்ன?

ரோஹித், கோலி, தோனி ஆகியோரில் யார் பெஸ்ட்?… யுவ்ராஜ் சிங் சொன்ன பதில்!

5 வீரர்களைத் தக்கவைக்க அனுமதி… ஆனா RTM கிடையாது…? பிசிசிஐ முடிவு குறித்த தகவல்!

ஒரே இன்னிங்ஸில் 498 ரன்கள்: குஜராத் பள்ளி மாணவர் சாதனை!

கான்பூர் டெஸ்ட் போட்டி நடக்குமா?.. முதல் மூன்று நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments