Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யூரோ கோப்பையை முதன்முறையாக கைப்பற்றிய போர்ச்சுக்கல்

யூரோ கோப்பையை முதன்முறையாக கைப்பற்றிய போர்ச்சுக்கல்
, திங்கள், 11 ஜூலை 2016 (10:57 IST)
யூரோ கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி போர்ச்சுக்கல் அணி முதன்முறையாக கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.
 

 
ஃபிரான்சில் கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி தொடங்கி, யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வந்தன. இத்தொடரில் 24 அணிகள் கலந்து கொண்டன. அரையிறுதி ஆட்டங்களில் ஜெர்மனியை வீழ்த்தி ஃபிரான்சும், வேல்ஸ் அணியை வென்று போர்சுக்கலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
 
இந்நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்தாட்ட போட்டியின் இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல் - பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் இரண்டு அணிகளும் கோல் போட கடுமையாக முயற்சித்தன. இரு அணிகளும் முதல் பாதியில் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை வீணடித்தன.
 
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, போர்ச்சுக்கல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ காயம் காரணத்தால் பாதியிலேயே வெளியேறியதால், ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காத நிலையில், கூடுதல் அவகாசமாக 30 நிமிடங்கள் அளிக்கப்பட்டன.
 
முதல் 15 நிமிடங்களிலும் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், இரண்டாவது 15 நிமிட ஆட்டம் தொடங்கியது. இதில், போர்சுகல் அணி வீரரான எடர் அபாரமாக ஒரு கோலை அடித்ததும் மைதானம் ஆராவாரத்திற்கு உள்ளானது.
 
காயம் காரணமாக வெளியேறிய கேப்டன் ரொனால்டோ துள்ளிக்குதித்தார். பின்னர், பதில் கோல் அடிக்க ஃபிரான்ஸ் அணி வீரர்கள் கடுமையாக முயன்றனர். கடைசியில் 1-0 என்ற கணக்கில் ஃபிரான்ஸ் அணியை வீழ்த்தி முதன்முறையாக போர்ச்சுக்கல் அணி கோப்பைய கைப்பற்றியது.

எடர் அடித்த கோல் வீடியோ:
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கால்பந்து ஜாம்பவானின் மூன்றாவது திருமணம்