ரொனால்டோ பாணியில் பீர் பாட்டிலை ஓரம்கட்டிய பிரான்ஸ் கால்பந்து நட்சத்திரம்!
யூரோ கால்பந்து போட்டியின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ, கோகோ கோலா பாட்டிலை ஓரங்கட்டியதால் அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் இன்றைய யூரோ கால்பந்து போட்டியின் செய்தியாளர் சந்திப்பில் பிரான்ஸ் வீரர் போக்போ என்பவர் தனது டேபிள் முன் வைக்கப்பட்டு இருந்த பீர் பாட்டிலை எடுத்து ஓரங்கட்டி உள்ளர். இது குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
இந்த நிலையில் போக்போ ஓரங்கட்டிய பீர் பாட்டில் நிறுவனத்திற்கு எத்தனை கோடி நஷ்டம் வரப்போகிறதோ என்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த பிரான்ஸ் வீரர் போக்போ கோகோ கோலா பாட்டிலை ஓரங்கட்டவில்லை என்பதும் அவர் முன் அந்த இரண்டு கோலா பாட்டில்களும் ஒரு தண்ணீர் பாட்டிலும் அப்படியே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.