Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரபரப்பான கட்டத்தில் இறுதிப்போட்டி- வெஸ்ட் இண்டீசை மழைக் காப்பாற்றுமா?

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (11:26 IST)
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாங்து அணி வெற்றியை மழை தடுக்கும் சூழல் உருவாகியுள்ளது.

கொரோனாவுக்கு பின்னர் நடக்கும் முதல் சர்வதேச தொடராக இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் உள்ளது. இதில் ஏற்கனவே நடந்து முடிந்த இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளன.

அதையடுத்து இப்போது நடந்த வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் சேர்த்தது. அதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்டூவர்ட் பிராட் வேகத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பிராட் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அதிரடியாக விளையாடியது. 2 விக்கெட்களை இழந்து 262 ரன்கள் சேர்த்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 398 ரன்கள் முன்னிலை பெற்றது. 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மூன்றாம் நாள் முடிவில் 10 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் எப்படியும் வெற்றி பெறுவது உறுதி என்ற நம்பிக்கையில் இருந்தது இங்கிலாந்து அணி. ஆனால் நேற்று நடக்க வேண்டிய நான்காம் நாள் ஆட்டம் முழுவதும் மழை மற்றும் மோசமான வானிலைக் காரணமாக தடைபட்டது. அதுமட்டுமில்லாமல் ஐந்தாம் நாளான இன்றும், மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதால் போட்டி டிராவில் முடிய அதிக வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments