Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து வெற்றியை மழை தடுக்குமா? நேற்று இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டதால் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (06:58 IST)
இங்கிலாந்து வெற்றியை மழை தடுக்குமா?
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே கடந்த 24 ஆம் தேதி தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 369 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து முதல் இன்னிங்சில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 197 ரன்கள் மட்டுமே எடுத்து முதல் இன்னிங்சில் பின்னடைவில் இருந்தது 
 
இதனையடுத்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் மிக அபாரமாக விளையாடி 2 விக்கெட்டுக்களிஅ மட்டுமே இழந்து 226 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதன் பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணி 399 ரன் வெற்றிபெற இலக்காக நிர்ணயிக்கப்பட்டது
 
இதனை அடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் 2 விக்கெட்டுகள் மளமளவென விழுந்து விட்டது. இந்த நிலையில் 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்த மே.இதீவுகள் அணி நேற்று இரண்டாவது இன்னிங்ஸை தொடர முயன்ற நிலையில் மழை குறுக்கிட்டது. நேற்று மழை காரணமாக இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று கடைசி நாளிலும் மழை பெய்தால் போட்டி டிராவில் முடிய வாய்ப்புள்ளது.
 
ஸ்கோர் விபரம்:
 
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 369/10
 
போப்: 91
பட்லர்: 67
பிராடு: 62
பர்ன்ஸ்: 57
 
மே.இ.தீவுகள் முதல் இன்னிங்ஸ்: 197/10
 
ஹோல்டர்: 46
டெளரிச்: 37
கேம்பெல்: 32
 
 
இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 226/2 டிக்ளேர்
 
பர்ன்ஸ்: 90
ரூட்: 68 அவுட் இல்லை
சிப்லே: 56
 
மே.இ.தீவுகள் 2வது இன்னிங்ஸ்: 10/2
 
கேம்பெல்: 0
ரோச்: 4

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments