Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே ஜெயிக்க பிரார்த்தனை செய்யும் 4 அணிகள்.. கொல்கத்தாவை வீழ்த்துமா ‘தல’ டீம்..!

Webdunia
ஞாயிறு, 14 மே 2023 (16:30 IST)
இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் அந்த அணி பிளே ஆப் சுற்றும் தகுதி பெரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இன்று தல தரிசனத்தை காண சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னை அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி ஏழு போட்டிகளில் வெற்றி நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்து 15 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஏற்கனவே குஜராத் அணி 16 புள்ளிகள் பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் 17 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது மட்டுமின்றி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் அதே நேரத்தில் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் அந்த அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கு செல்ல ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது என்பதால் சென்னை அணி வெற்றி பெற வேண்டும் என மும்பை, லக்னோ, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் பிரார்த்தனை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளதை அடுத்து இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர் இருப்பதால் கோலி அழுத்தமில்லாமல் விளையாடலாம்- டிவில்லியர்ஸ் கருத்து!

மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்..!

15 நிமிடங்களில் விற்று தீர்ந்த சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட்: ரசிகர்கள் ஏமாற்றம்..!

Watch: நீ பொட்டு வெச்ச தங்கக்குடம்.. பயிற்சி ஆட்டத்தில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த தல தோனி!

கொல்கத்தாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி இடமாற்றமா? என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments