இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்டர் சேத்தன் சவுகான் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
இந்திய அணியின் லிட்டில் மாஸ்டர் என சொல்லப்படும் கவாஸ்கருடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அபாயகரமான தொடக்க ஆட்டக்காரர் என்ற பெயரை பெற்றவர் சேத்தன் சவுகான். அவர், இந்தியாவுக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார், 2084 டெஸ்ட் ரன்களை 31.57 என்ற சராசரியில் எடுத்துள்ளார். அவரது ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் சதமே அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 73 வயதில் மாரடைப்புக் காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு டிடிசிஏவில் பல பதவிகளை வகித்தார். உத்தர பிரதேசத்தில் அமைச்சராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.