Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடைகளை தாண்டி மெஸ்ஸியை கட்டிப்பிடித்த ரசிகர்...வைரல் வீடியோ

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2023 (20:14 IST)
அர்ஜென்ட் – ஆஸ்திரேலியா அணிகள் இடையே நட்புறவு கால்பந்து போட்டி நடைபெற்றபோது, பாதுகாப்பை மீறி, ரசிகர் ஒருவர் மெஸ்ஸியை கட்டிப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச கால்பந்து விளையாட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மெஸ்ஸி. அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த இவர்,  சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தேசிய அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

இந்த நிலையில், உலக சாம்பியன் அர்ஜென்டினா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டி, சீனா தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.

இதில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டியா அணி 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

இந்தப் போட்டியின் இடையே ரசிகர் ஒருவர் மெஸ்ஸியின் எண் கொண்ட ஜெர்சியை அணிந்தபடி, பாதுகாப்பு வீரர்களை தாண்டி, மைதானத்திற்குள்  நுழைந்து மெஸ்ஸியை கட்டிப்பிடித்து மகிழ்ந்தார். அதன்பின்னரும் அவர், அங்கிருந்து வெளியேறாமல், மைதானத்திற்குள் ஓடினார். அவரைப் பிடிக்க முயன்ற பாதுகாப்பு வீரர்களும் அவரைப் பிடிக்க முடியாமல் திணறினர். ஒருகட்டத்தில் ரசிகர் மைதானத்தில் விழுந்தார். அவரை அலேக்காக தூக்கிச் சென்றனர். இந்த வீடியோவை மெஸ்ஸி தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ''திஸ் இஸ் கிரேஸி'' என்று பதிவிட்டுள்ளார்.

இப்போட்டியில். அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி ஆட்டம் தொடங்கிய 79 வது வினாடிக்குள் அற்புதமாக கோல் அடித்தார். இது அவரது கேரியரில் அடிக்கப்பட்ட வேகமான கோல் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

சிராஜ் ஒரு போர் வீரர் போன்றவர்… ஜோ ரூட் புகழாரம்!

வெற்றியோ தோல்வியோ.. 96 ஆண்டு கால சாதனையை சமன் செய்த இந்தியா - இங்கிலாந்து 5வது டெஸ்ட்..!

WTC தொடர்களில் யாரும் படைக்காத சாதனையைப் படைத்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments