இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி-20: இந்தியா போராடி தோல்வி

Webdunia
சனி, 7 ஜூலை 2018 (07:15 IST)
இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, டி-20 போட்டி தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி நேற்று இரண்டாவது டி-20 போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதியது.
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானம் செய்ததால் இந்திய அணி முதலில் களமிறங்கியது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராத் கோஹ்லி 47 ரன்களும், தோனி 32 ரன்களும் எடுத்தனர்
 
இதனையடுத்து 149 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 149 ரன்கள் எடுத்து இரண்டு பந்து மீதமிருக்கையில் த்ரில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி ஹேல்ஸ் 58 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார். பேர்ஸ்டவ் 28 ரன்கள் எடுத்தார்.
 
இந்த வெற்றியின் மூலம் இந்தியா, இங்கிலாந்து அணிகள் 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி வரும் நாளை நடைபெறும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WPL மெகா ஏலம் 2026: அதிக விலைக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா.. ஏலம் போகாத ஒரே வீராங்கனை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன்..!

இந்திய அணி வெற்றி பெற்றபோது கவுதம் காம்பீரை ஏன் பாராட்டவில்லை? கவாஸ்கர் கேள்வி..!

WBBL தொடரில் இருந்து திடீரென விலகிய ஜெமிமா.. ஸ்மிருதி மந்தனா காரணமா?

மகளிர் பிரீமியர் லீக் 2026 ஏலம் எப்போது? தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், சோஃபி டிவைனுக்கு பெரும் கிராக்கி..!

நான் சந்தித்ததிலேயே கோலிதான் GOAT… மிட்செல் ஸ்டார்க் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments