Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி ஐபிஎல் தொடரில் எங்கள் நாட்டு வீரர்கள் விளையாடுவது சந்தேகம்… இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்!

Webdunia
புதன், 12 மே 2021 (08:51 IST)
2021 சீசனின் ஐபிஎல் தொடரின் மீதி போட்டிகளில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவது சந்தேகம் என அந்நாட்டு கிரிக்கெட் வாரிய இயக்குனர் ஆஷ்லே கில்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வீரர்கள் எப்போது அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பிசிசிஐக்கு 2000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒளிபரப்பு மூலம் வரும் விளம்பர வருமானம் உள்ளிட்டவைகளை இப்போது பிசிசிஐ இழந்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் ஐபிஎல் தொடரை எப்போது நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கி கிரிக்கெட் வாரிய இயக்குனர் ஆஷ்லே கில்ஸ் ‘எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் எங்கள் வீரர்கள் விளையாடுவது சந்தேகம்தான். ஏனென்றால் திட்டமிட்ட சர்வதேச தொடர்களில் அவர்களின் பங்களிப்பு தேவை. அப்படி அதில் பாதிப்பு இல்லை எனில் ஐபிஎல் தொடரில் விளையாடுவார்கள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத ஷர்துல் தாக்கூர்… இந்த அணியில் இணைகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments