Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த்ரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து: தொடரை இழந்த ஆஸ்திரேலியா

Webdunia
திங்கள், 7 செப்டம்பர் 2020 (07:19 IST)
த்ரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து: தொடரை இழந்த ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது 
 
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. கேப்டன் பின்ச் 40 ரன்களும் ஸ்டோனிஸ் 35 ரன்களும் எடுத்தனர் 
 
அதன் பின்னர் இங்கிலாந்து அணி 158 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது. இங்கிலாந்து அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 158 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் பட்லர் மிக அபாரமாக விளையாடி 77 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இங்கிலாந்து அணியின் மற்றொரு வீரரான மலன் 42 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இரு நாட்டு அணிகளுக்கு இடையிலான அடுத்த டி20 போட்டி வரும் 8ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments