Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 விக்கெட்களை இழந்து தடுமாறும் இங்கிலாந்து… ஆஸி பவுலர்கள் ஆதிக்கம்!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (09:44 IST)
இன்று தொடங்கிய ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் திருநாளை ஒட்டி ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடத்தப்படும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த ஆண்டும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு முதல் பந்தில் இருந்தே அதிர்ச்சி காத்திருந்தது. ஆஸி அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அவுட் ஆகி பெவிலியன் திரும்பி வருகின்றனர். சற்று முன்பு வரை 122 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. ஆஸி அணியின் ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் ஆகிய மூவரும் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

சாம்பியன்ஸ் ட்ராபி விவகாரம்; பாகிஸ்தானுக்கு ரூ.38 கோடி வழங்கும் ஐசிசி! - ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments