Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஷஸ் டெஸ்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் நிதானம் காட்டும் இங்கிலாந்து!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (10:21 IST)
ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின் மூன்றாம் நாள் போட்டி இன்று நடந்து வருகிறது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது என்பதும் அந்த அணி 50 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணியின் பேட்டிங் முடிந்தவுடன் இடைவேளை விடப்பட்ட நிலையில் இடைவேளைக்கு பின்னர் திடீரென கனமழை பெய்த காரணத்தினால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று தொடங்கிய நிலையில் ஆஸி அணிக்கு சிறப்பான தொடக்கத்தை டேவிட் வார்னர் மற்றும் மார்னஸ் லபுஷான் ஆகியோர் அமைத்துக் கொடுத்தனர். ஆனால் அவர்கள் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அவுட்டானார்கள். ஆனால் 6 ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆஸி அணியின் வீரர் டிராவிஸ் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்து 85 பந்துகளில் சதமடித்தார். இதனால் ஆஸி அணி வலுவான நிலைக்கு சென்றுள்ளது. இரண்டாம் நாள் ஆட்டமுடிவில்  7 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் 196 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. டிராவிஸ் ஹெட் 112 ரன்களோடு களத்தில் இருந்தார்.

இதையடுத்து இன்று தொடர்ந்து ஆடிய ஆஸி அணி 425 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. டிராவிஸ் ஹெட் 152 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். இதனால் ஆஸி அணி முதல் இன்னிங்ஸில் 277 ரன்கள் முன்னிலை பெற்றது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் போல விக்கெட்களை இழக்காமல் நிதானமாக ஆட்யி வருகிறது. தற்போது வரை 2 விக்கெட்கள் இழந்து 107 ரன்கள் சேர்த்துள்ளது. ஜோ ரூட் 26 ரன்களோடும், டேவிட் மலான் 36 ரன்களோடும் களத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

பிரித்வி ஷா மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்… டெல்லி அணி உரிமையாளர் கருத்து!

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

அடுத்த கட்டுரையில்
Show comments