Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ட்ராவிஸ் ஹெட் சதத்தால் வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!

Advertiesment
ட்ராவிஸ் ஹெட் சதத்தால் வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!
, வியாழன், 9 டிசம்பர் 2021 (16:02 IST)
ஆஷஸ் தொடரின் இரண்டாம் நாளில் ஆஸி அணியின் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது என்பதும் அந்த அணி 50 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணியின் பேட்டிங் முடிந்தவுடன் இடைவேளை விடப்பட்ட நிலையில் இடைவேளைக்கு பின்னர் திடீரென கனமழை பெய்த காரணத்தினால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில் ஆஸி அணிக்கு சிறப்பான தொடக்கத்தை டேவிட் வார்னர் மற்றும் மார்னஸ் லபுஷான் ஆகியோர் அமைத்துக் கொடுத்தனர். ஆனால் அவர்கள் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அவுட்டானதில் இப்போது 5 விக்கெட்களை இழந்து 200 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

ஆனால் அதன் பிறகு ஆஸி அணியின் வீரர் டிராவிஸ் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்து 85 பந்துகளில் சதமடித்தார். இதனால் ஆஸி அணி வலுவான நிலைக்கு சென்றுள்ளது. இரண்டாம் நாள் ஆட்டமுடிவில்  7 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் 196 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. டிராவிஸ் ஹெட் 112 ரன்களோடு களத்தில் இருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனியை தவறாக கூறிய ஐபிஎஸ் அதிகாரி: வழக்கை ரத்து செய்ததா நீதிமன்றம்?