Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த இங்கிலாந்து பவுலரை மட்டும் சாதாரணமாக எண்ணிவிடவேண்டாம்! ஆகாஷ் சோப்ரா அறிவுரை!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (16:32 IST)
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை லேசாக எண்ணிவிட வேண்டாம் என வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்  முதல் இரு டெஸ்ட் போட்டகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 5ம் தேதி (நாளை) தொடங்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் சென்னை வந்து கொரோனா கால தனிமைப் படுத்துதலை முடித்துக்கொண்டு இப்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த போட்டிகள் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா ‘இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஆண்டர்சன் முன்பு போல பார்மில் இல்லை என்றாலும், அவரை லேசாக எண்ணிவிடக் கூடாது. அவர் விக்கெட்கள் வீழ்த்தும் சூட்சுமத்தை அறிந்தவர். ஆண்டர்சன் பந்துவீசும்போது கிரீஸை விட்டு வெளியே வந்து ஆடினால் அவரது ரிதமை குலைக்க முடியும். அவர் 40 வயதை நெருங்கிக் கொண்டு இருந்தாலும், களைப்படைவதே இல்லை ‘ எனக் கூறியுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments