Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நட்சத்திர வீரர் ரோஜர் பெடரரை வீழ்த்தி பட்டத்தை தட்டிச்சென்ற தீம்!

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2019 (08:54 IST)
இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் முன்னணி வீரர் ரோஜர் பெடரர் தோல்வி அடைந்துள்ளார்.
 
ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம், இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்விஸ் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரரை வீழ்த்தி தனது முதல் 'மாஸ்டர்ஸ் 1000' பட்டத்தை வென்றுள்ளார்.
 
17 கிராண்ட் ஸ்லாம் பட்டங்ளை வென்ற டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர், இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் 1000 தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த தீமுடன் மோதினார். 
 
உலக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள பெடரர், முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.  ஆனால் அடுத்த இரண்டு செட்களை போராடி வென்று 6-3 என்ற கணக்கில் தீம் வெற்றி பெற்றார். இது அவர் வெல்லும் முதல் மாஸ்டர்ஸ் 1000 பட்டமாகும். 
 
6வது முறையாக இந்தியன் வெல்ஸ் பட்டத்தை வென்று பெடரர்  சாதனை படைக்க இருந்த நிலையில், அதை தீம் தடுத்துள்ளார். இதற்கு முன் 4 முறை இருவரும் நேருக்கு நேர் மோதியிருந்த நிலையில், 2-2 என வெற்றி பெற்று சமமாக இருந்தனர். தற்போது தீம் 3-2 என பெடரருக்கு எதிராக முன்னிலை பெற்றுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜோ ரூட் 150, பென் ஸ்டோக்ஸ் 141.. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து இமாலய ஸ்கோர்..!

பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம்: முன்னாள் வீரர் கருத்து!

சச்சினின் சாதனையை ரூட்டால் முறியடிக்க முடியுமா?... ரிக்கி பாண்டிங் கருத்து!

இனி சச்சின் மட்டும்தான்…வரலாற்று சாதனைப் படைத்த ஜோ ரூட்!

மூன்றாம் நாள் ஆட்டம்: ஜோ ரூட் அபார சதம்… வலுவான நிலையில் இங்கிலாந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments