Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினேஷ் கார்த்திக்குக்கு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு?

Webdunia
புதன், 30 மே 2018 (15:48 IST)
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் போட்டியில் விளையாட ஐசிசி அங்கீகாரம் அளீத்தது. தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாட உள்ளது. 
 
இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி, வரும் 4 ஆம் தேதி பெங்களூரில் நடைபெற உள்ளது. இந்த டெஸ்டில் இருந்து கோலி விலகியுள்ளதால், ரகானே கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது.  
 
போட்டியில் விளையாடும் அணி வீரர்கல் ஏற்கனவே அறிவிக்கபப்ட்ட நிலையில், ஐபிஎல் போட்டின் போது காயமடைந்ததால் சகா இந்த போட்டியில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது. 
 
இதனால் அவர் இடத்தில் தினேஷ் கார்த்திக் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஐபிஎல் போட்டியில் அவரது பேட்டிங்கும், விக்கெட் கீப்பிங்கும் நன்றாக இருந்ததால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது. 
 
தினேஷ் கார்த்திக் கடைசியாக 2010 ஆம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலிக்கு திருமணப் பரிசாக ரொனால்டோ அளித்த மோதிரத்தின் விலை இத்தனைக் கோடியா?

ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது?

சிஎஸ்கே அணியிடம் இருந்து ‘அதை’தான் கேட்டுள்ளேன்… அஸ்வின் விளக்கம்!

100 கோடி நஷ்டஈடு வழக்கு! நீதிமன்றம் வர மறுத்த தோனி! - என்ன காரணம்?

மாநில டி 20 லீக்கில் இருந்து தடை செய்யப்பட்ட யாஷ் தயாள்!

அடுத்த கட்டுரையில்
Show comments