Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்த தல தோனி!

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (19:19 IST)
டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்த தல தோனி!
ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டியின் நான்காவது ஆட்டம் இன்று நடைபெற இருக்கும் நிலையில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன
 
சார்ஜாவில் நடைபெறவிருக்கும் இந்த போட்டிக்கான டாஸ் சற்று முன் போடப்பட்ட இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஏற்கனவே மும்பை அணிக்கு எதிராகவும் டாஸ் வென்ற தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் அம்பத்தி ராயுடு நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கொரோனாவில் இருந்து குணமான ருத்ராஜ் கெய்க்வார்டு அணியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த போட்டியில் அம்பத்தி ராயுடு மிக அருமையாக விளையாடினாலும் அவர் தனது 100 சதவீத விளையாட்டு திறனை வெளிப்படுத்தவில்லை என்பதால் அவர் மாற்றப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது 
 
அதேபோல் ராஜஸ்தான் அணியில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் உடன் ராபின் உத்தப்பா, சாம்சன், மில்லர், டாம் கர்ரன், ஆர்ச்சர், உனாகட், ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இந்தியா ஏ அணி அறிவிப்பு

யுவ்ராஜுக்கு இருந்த ஒரே நண்பர் சச்சின்… மற்றவர்கள் அவர் முதுகில் குத்தினர்- யோக்ராஜ் சிங் குற்றச்சாட்டு!

ஓய்வு முடிவில் இருந்து திரும்ப வந்த ராஸ் டெய்லர்… தாயாரின் பிறந்த நாட்டுக்காக விளையாட முடிவு!

இர்ஃபான் பதான் மட்டும் சொல்லல… தோனிய சோதனை செய்யணும்- யோக்ராஜ் சிங் கருத்து!

பிசிசிஐ தலைவர் ஆகிறாரா சச்சின் டெண்டுல்கர்?

அடுத்த கட்டுரையில்
Show comments