Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்கதான் திரும்பி வருவோம்னு சொன்னோம்ல… வெற்றிக்குப் பின் தோனி!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (10:47 IST)
சிஎஸ்கே அணி நேற்று சன் ரைசர்ஸ் ஐதரபாத் அணியை எளிதாக வென்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் தொடர்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 44வது போட்டியில் சென்னை – ஐதராபாத் அணிகள் மோதின. இதில், சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.  இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில்7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134  ரன்கள் எடுத்து, சென்னை அணிக்கு 135 ரன்களை இலக்கான நிர்ணயித்துள்ளது.

எளிய இலக்கை துரத்திய சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.வெற்றிக்கு பின்னர் பேசிய கேப்டன் தோனி ‘கடந்த ஆண்டு மோசமான முறையில் தோல்வி அடைந்தோம். அப்போது அடுத்த ஆண்டு வலிமையோடு திரும்பி வருவோம் எனக் கூறினோம். அதைபோல வந்துள்ளோம். ஏனென்றால் தவறுகளில் இருந்து பாடம் கற்றுள்ளோம். இந்த  பெருமை முழுவதும் வீரர்களுக்கும் துணைப் பயிற்சியாளர்களுக்கும்தான் செல்லவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இர்ஃபான் பதான் மட்டும் சொல்லல… தோனிய சோதனை செய்யணும்- யோக்ராஜ் சிங் கருத்து!

பிசிசிஐ தலைவர் ஆகிறாரா சச்சின் டெண்டுல்கர்?

முதல் 5 போட்டிகளிலும் 50+ ரன்கள் அடித்த உலகின் முதல் வீரர்.. புதிய உலக சாதனை..!

தோனியின் அந்த குணம் என்னைப் பிரமிக்கவைக்கிறது… குட்டி ABD கருத்து!

சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த ஷிகார் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அடுத்த கட்டுரையில்
Show comments