இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையோன கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டிணத்தில் நடந்தது. இதில் இந்தியா அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விசாகப்பட்டிணத்தின் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்ததால் பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க திணறினார்கள். ரோகித் சர்மா விளையாடி கொண்டிருக்கும்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் விராட் கோஹ்லியுடன் இணைந்து ரன் எடுக்க பெறிதும் சிறமப்பட்டார்.
இதனால் ரோகித் ரிட்டயர்டு ஹர்ட் மூலம் வெளியேறலாம் என்ற நிலை ஏற்பட்டது. அவ்வாறு ரோகித் சர்மா வெளியேறினால் இந்திய அணிக்கு கடினமாகி விடும் என்பதை உணர்ந்த தோனி அவருக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார்.
அதில் அவர், உங்களால் தொடர்ந்து விளையாட முடியாது என்று நீங்கள் கருதினால், உங்களது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என்று கூறி இருந்தார்.
தோனியின் அறிவுரைப்படி அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 5 பவுண்டரி 3 சிக்சருடன் 65 பந்தில் 70 ரன்கள் சேர்த்தார்.