இரண்டு முறையும் ஒரே பவுலரிடம் வீழ்ந்த தோனி
ஒரு தொடரில் இரண்டு முறை ஒரே பந்துவீச்சாளரிடம் சிஎஸ்கே கேப்டன் தோனி தனது விக்கெட்டை இழந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஏற்கனவே கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது லீக் போட்டியில் தோனியின் விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியிலும் தோனியின் விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி எழுதினார். மேலும் அவர் இரண்டு முறையும் தோனியை போல்டாக்கி அவுட் ஆக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
ஒரு தொடரில் ஒரே பந்து வீச்சாளரிடம் இரண்டு முறை தோனி அவுட்டாகி இருப்பது ஏற்கனவே நடந்த ஒன்று தான். ஏற்கனவே மும்பை அணியின் மலிங்காவின் பந்து வீச்சில் ஒரே தொடரில் தோனி இரண்டு முறை விக்கெட்டை இழந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்றைய போட்டி முடிந்தவுடன் வருண் சக்கரவர்த்தியை அழைத்து தோனி பாராட்டியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன