நேற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டியில் கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க வேண்டிய நிலையில் ரிங்குசிங் பேட்டிங் செய்து கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்தியாவுக்கு வெற்றி தேடி தந்தார். இந்த நிலையில் அவர் தான் தோனியிடம் கற்றுக் கொண்டதை நேற்று செயல்படுத்தியதாக பேட்டி அளித்துள்ளார்.
நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 208 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா களமிறங்கியது.
இந்த நிலையில் கடைசி பந்தில் ஒரு ரன் அடிக்க வேண்டும் என்ற நிலையில் அனைத்து ஃபீல்டர்களும் தன்னை சுற்றி நின்றிருந்த போது தோனி கூறியது ஞாபகம் வந்ததாக. நான் தோனியை இரண்டு முறை சந்தித்தேன் என்றும் அப்போது அவர் அழுத்தமாக இருக்கும்போது அமைதியாக இருப்பது எப்படி என கூறியதாகவும் அதைத்தான் நேற்று பின்பற்றினேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று ரிங்குசிங் அடித்த சிக்சரால் அவருக்கு பாராட்டு மழை பொழிந்து வந்த நிலையில் அதை தான் தோனியிடமிருந்து தான் கற்றேன் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.