தோனி பெரும்பாலும் அனைவராலும் மிஸ்டர் கூல் என்றே அழைக்கபடுகிறார். இதனை உறுதி செய்யும் விதமாக தோனியின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிறது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
									
										
								
																	
	 
	நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா நடுவேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்று பெற்றது.
	 
 
									
										
			        							
								
																	
	செப்டம்பர் 21 ஆம் தேதி கொல்கத்தாவில் அடுத்த போட்டி நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணியினர் இன்று கொல்கத்தா புறப்பட்டு சென்றனர். 
	 
 
									
											
									
			        							
								
																	
	மீனம்பாக்கம் விமான நிலையத்தின் காத்திருப்பு பகுதியில் சிறுதி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. அப்போழுது மற்ற வீரர்கள் எல்லோரும் அமர்ந்திருக்க தோனி கீழே படுத்துவிட்டார். 
 
									
			                     
							
							
			        							
								
																	
									
										
										
								
																	
	சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை ரசிகர்கள் மைதானத்திற்குள் பாட்டில்களை வீசினர். அப்போதும் தோனி மைதானத்திலேயே படுத்து ஓய்வெடுத்தார். 
 
									
			                     
							
							
			        							
								
																	
	தற்போது விமான நிலையத்தில் படுத்திருக்கும் புகைப்படத்தை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது.