Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளம் வீரர்களின் வாய்ப்பை பறிக்கும் தோனி: மலையாய் எழும் விமர்சனங்கள்....

Advertiesment
இளம் வீரர்களின் வாய்ப்பை பறிக்கும் தோனி: மலையாய் எழும் விமர்சனங்கள்....
, வியாழன், 5 அக்டோபர் 2017 (17:14 IST)
இந்திய அணி வீரர்களின் தேர்வில் தோனிக்கு முக்கியத்துவம் அளிப்பதால் இளம் வீரர்களின் வாய்ப்பு பறிபோவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.


 
 
இந்திய அணிக்கு மூன்று விதமான உலகக்கோப்பைகளை வென்று தந்தவர் தோனி. இவர் இந்திய அணியின் வெற்றிக்கேப்டன் என்றும் அழைக்கப்படுகிறார். 
 
சில காரணங்களுக்காக தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வையும் அறிவித்தார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தனது கேப்டன் பொறுப்பையும் துறந்தார். 
 
இருப்பினும் அவரது வயது மற்றும் பார்ம் குறித்து அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. தோனி எப்பொழுது தனது ஓய்வை அறிவிப்பார் என காத்துக்கொண்டிருக்கும் சிலரும் உள்ளனர். 
 
இந்நிலையில் வரும் 2019 உலக கோப்பை வரை தோனி விளையாட திட்டமிட்டிருப்பதால் அவர் இளம் வீரர்களுக்கான வாய்ப்பை பறிக்கிறார் என விமர்சனம் எழுந்துள்ளது. 
 
டி20 போட்டிகளில் தோனியை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் உள்ளிட்ட நல்ல பார்மில் உள்ள வீரர்களுக்கு வாய்ப்பு நிராகரிக்கப்படுவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 
 
எனவே, தோனி டி-20 போட்டிகளில் இருந்து விலகி இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கூறி வருகின்றனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக கோப்பை திருவிழாவில் முதல்முறையாக பங்கேற்கும் இந்தியா