குழி தோண்டிய தோனி – இறங்கி விளையாடிய மகள் ஸீவா

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2018 (09:11 IST)
சென்னை வந்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மெரினா பீச்சில் தனது மகள் ஸீவாவுடன் விளையாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருவதால் தோனி தற்போது நீண்டகால ஓய்வில் இருக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரியில் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறார். இந்த ஓய்வில் ஜாலியாக தனது மகள் மற்றும் மனைவியுடன் பொழுதைப் போக்கி வருகிறார். தன் மகளோடு சேர்ந்து டான்ஸ் ஆடுவது, விளையாடுவது போன்ற வீடியோக்களை எடுத்து டிவிட்டரில் பகிர்ந்து வருகிறார். இதை தோனி ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.

அதையடுத்து தற்போது மற்றொரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். இந்தியா சிமெண்ட்ஸ் அதிபரும் சி.எஸ்.கே. அணியின் உரிமையாளருமான சீனிவாசனைப் பற்றிய நூலொன்றின் வெளியீட்டிற்காக சென்னை வந்த தோனி சென்னையில் சில நாட்கள் தங்கி ஜாலியாக பொழுதைப் போக்கி வருகிறார். நேற்று சென்னை மெரினா பீச்சுக்கு சென்ற அவர் பீச்சில் தனது மகள் ஸீவாவை மணலில் புதைத்து விளையாண்டுள்ள வீடியோவைப் பகிர்ந்திருக்கிறார். அது இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

சமீபகாலமாக அவுட் ஆஃப் பார்மில் இருக்கும் தோனி, ஓய்வுக் காலத்தில் உள்ளூர் போட்டிகளில் விளையாண்டு மீண்டு வரவேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தோனி மீது விமர்சனம் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

அடுத்த கட்டுரையில்
Show comments