தல தோனி சமீபத்தில் பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் எழுதிய 'காபி டேபிள்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்தார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த விழா முடிந்த பின்னரும் அவர் சென்னையின் பல இடங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவற்றில் ஒன்றுதான் சென்னை பீச் ஒன்றில் தோனி தனது மனைவி சாக்சி மற்றும் ஸிவாவுடன் இருக்கும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் மகள் ஸிவாவுடன் தோனி கடலில் விளையாடுவதும் இதனை சாக்சி வீடியோ எடுப்பது போன்றும் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றதில் இருந்தே சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளுக்கு அவர் அவ்வப்போது சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.