சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது.
நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். ஆனால் தொடக்கத்திலேயே சென்னை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டுபிளசிஸ், மொயின் அலி, அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, தோனி ஆகிய ஐந்து விக்கெட்டுகள் மளமளவென விழுந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து விட்ட நிலையில் ருத்ராஜ் தனி ஆளாக நின்று சென்னை அணியை கரை சேர்த்தார். அவர் 58 பந்துகளில் 82 ரன்கள் அடித்தார் என்பதும் அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
இதை அடுத்து சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் 157 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ருத்ராஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் சென்னை அணி முதலிடத்தில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றி குறித்து பேசியுள்ள சி எஸ் கே கேப்டன் தோனி 30 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்த நிலையில், கௌரவமான ரன்களை எட்ட வேண்டும் என நினைத்தோம். நாங்கள் 140 ரன்கள் எதிர்பார்த்தோம். ஆனால் ருதுராஜும், பிராவோவும் 160 ரன்கள் பக்கம் கொண்டு சென்றுவிட்டனர். பிட்ச் ஆரம்பத்தில் மிகவும் மெதுவாக இருந்தது. ஆனால் இறுதியில் கொஞ்சம் ஒத்துழைத்தது. அதனால்தான் நான் முன்னால் இறங்கி விட்டேன். ஏனென்றால் பின்னால் இறங்கி ஆடுவது சுலபம் இல்லை. அணி சென்ஸிபிள் ஆடி பினிஷ் செய்தது எனக் கூறியுள்ளார்.