கொரோனா தொற்று வருவது நம் கட்டுப்பாட்டில் இல்லை… தேவ்தத் படிக்கல்!

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (13:44 IST)
பெங்களூர் அணியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் கொரோனாவில் இருந்து மீண்டு அணிக்குள் திரும்பியுள்ளார்.

கடந்த ஐபிஎல் சீசனில் கவனம் ஈர்த்த இளம் வீரர்களில் ஒருவர் ஆர் சி பி அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல். இவர் தனது அறிமுக சீசனிலேயே 15 போட்டிகளில் 473 ரன்கள் சேர்த்து எமர்ஜிங் பிளேயர் விருதை பெற்றார். அதனால் இந்த ஆண்டு அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. ஆனால் அவர் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அணியுடன் இன்னும் பயோபபுளில் இணையவில்லை. இந்நிலையில் இப்போது அவருக்கு எடுக்கப்பட்ட சோதனைகளில் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளதால் அவர் அணியினருடன் பயோபபுளில் இணைந்துள்ளார்.

இப்போது பயிற்சியில் ஈடுபடும் அவர் விரைவில் ஆடும் லெவனில் இடம்பிடிப்பார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் அளித்த நேர்காணலில் ‘கொரோனா தொற்று வந்தது பின்னடைவுதான். ஆனால் அது நம் கட்டுப்பாட்டில் இல்லை. தொற்று உறுதியானதும் அதிலிருந்து விரைவில் விடுபட எண்ணினேன். அதன் பின் பிட்னெஸ் விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். இப்போது பூரண குணமடைந்துள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

அடுத்த கட்டுரையில்
Show comments