Publish Date: Mon, 05 Apr 2021 (09:07 IST)
Updated Date: Mon, 05 Apr 2021 (09:17 IST)
பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் விரைவில் அணியில் இணைவார் என ஆர்சிபி அணி அறிவித்துள்ளது.
கடந்த ஐபிஎல் சீசனில் கவனம் ஈர்த்த இளம் வீரர்களில் ஒருவர் ஆர் சி பி அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல். இவர் தனது அறிமுக சீசனிலேயே 15 போட்டிகளில் 473 ரன்கள் சேர்த்து எமர்ஜிங் பிளேயர் விருதை பெற்றார். அதனால் இந்த ஆண்டு அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
ஆனால் அவர் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அணியுடன் இன்னும் பயோபபுளில் இணையவில்லை. இந்நிலையில் அவர் கொரோனா நெகட்டிவ் என வந்தவுடன் விரைவில் அணியில் இணைவார் என ஆர்சிபி அணியின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடன் அணியின் மருத்துவக்குழு தொடர்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.