Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற டெல்லி: பேட்டிங் செய்யும் கொல்கத்தா!

Webdunia
வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (19:46 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 26வது போட்டி இன்று கொல்கத்தாவில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இன்னும் சில நிமிடங்களில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்யவுள்ளது
 
இன்றைய கொல்கத்தா அணியில் ஜோ டென்லி,  உத்தப்பா, பிரெத்வெயிட், கில், ரானா, தினேஷ் கார்த்திக், ரஸல், குல்தீப் யாதவ், பியூஷ் செளவ்லா, ஃபெர்குசன், ப்ரசித் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர்.
 
அதேபோல் டெல்லி அணியில் பிரத்வி ஷா, தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப்பண்ட், காலின் இங்க்ராம், மோரிஸ், அக்சார் பட்டேல், பவுல், திவேதியா, ரபடா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் உள்ளனர்.
 
கொல்கத்தா அணி ஏற்கனவே ஆறு போட்டிகள் விளையாடி நான்கில் வெற்றி பெற்ற 8 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. டெல்லி அணி 6 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றாலும் சென்னையின் முதல் இடத்திற்கு ஆபத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ப்ளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை.. மைக் ஹஸ்ஸி நம்பிக்கை!

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

சென்னை அணி வைத்த ‘டொக்கு’களால் 25500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.. இப்படிதான் ஆறுதல் பட்டுக்கணும்!

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments