Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாஸ் வென்ற டேவிட் வார்னர் எடுத்த அதிரடி முடிவு..!

டாஸ் வென்ற டேவிட் வார்னர் எடுத்த அதிரடி முடிவு..!
, சனி, 15 ஏப்ரல் 2023 (15:03 IST)
ஐபிஎல் தொடர் கிரிக்கெட்டில் இன்று 20வது போட்டி நடைபெற உள்ளதை அடுத்து இன்றைய போட்டி டெல்லி மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த நிலையில் டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் இன்று டாஸ் வென்றதை அடுத்து அவர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து பெங்களூர் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
புள்ளி பட்டியலை பொருத்தவரை டெல்லி அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் உள்ளது என்பதும் அதேபோல் பெங்களூர் அணி மூன்று போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று எட்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியில் டெல்லி அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா அல்லது பெங்களூர் மேலும் ஒரு வெற்றி பெற்று நான்கு புள்ளிகளை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சி எஸ் கே அணியில் இந்த மாற்றத்தை செய்யவேண்டும்… தோனிக்கு கவாஸ்கர் அறிவுரை!