ஐபிஎல் 2019: பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி!

ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (07:00 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 37வது போட்டியில் பஞ்சாப் அணியை டெல்லி அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனையடுத்து பஞ்சாப் அணி 12 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது
 
நேற்றைய போட்டியி டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச முடிவு செய்ததால் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி கெய்லேவின் அதிரடியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. கெய்லே 69 ரன்களும், மந்தீப் சிங் 30 ரன்களும் எடுத்தனர்.
 
இதனையடுத்து 164 என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி, ஆரம்பத்தில் பிபி ஷா விக்கெட்டை இழந்தாலும் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர்களின் பொறுப்பான ஆட்டத்தால் 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் ஐயர் 58 ரன்களும், தவான் 56 ரன்களும் எடுத்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 
 
இன்று நடைபெறவிருக்கும் இரண்டு போட்டிகளில் ஐதராபாத்-கொல்கத்தா அணிகளும் பெங்களூர்-சென்னை அணிகளும் மோதவிருக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் தமிழராக மாறிய ஹர்பஜன் சிங்கின் கலக்கல் வைரல் வீடியோ