Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2019: இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது டெல்லி

Webdunia
புதன், 16 அக்டோபர் 2019 (20:56 IST)
2019ஆம் ஆண்டின் புரோ கபடி போட்டியின் லீக் போட்டிகள் கடந்த வாரத்துடன் முடிவடைந்து, நேற்று முன்தினம் எலிமினேட்டர் போட்டிகள் நடைபெற்றது. இதில் பெங்களூரு, டெல்லி, பெங்கால் மற்றும் மும்பை ஆகிய 4 அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன
 
முதல் அரையிறுதி போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணியும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பெங்கால் மற்றும் மும்பை அணிக்கும் இடையே போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது 
 
அதன்படி இன்று பெங்களூர் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே முதலாவது அரையிறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இரண்டு அணி வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் விளையாடினார். இருப்பினும் இரண்டாம் பாதியில் டெல்லி அணி சுதாரித்து விளையாடியதன் காரணமாக அந்த அணி 44 புள்ளிகள் எடுத்தது. பெங்களூர் அணியால் 38 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் டெல்லி அணி 6 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
 
டெல்லி அணியின் நவீன்குமார் 13 ரைடு புள்ளிகளும், 2 போனஸ் புள்ளிகளும் என மொத்தம் 15 புள்ளிகள் பெற்று அணியின் வெற்றிக்கு உதவினார். அதேபோல் பெங்களூரு அணியின் பவன்குமார் ரைடில் 10 புள்ளிகளும் போனசாக மூன்று புள்ளிகளும் என மொத்தம் பதிமூன்று புள்ளிகளை தனது அணிக்காக பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments