அருண் ஜெட்லியின் மறைவு : இந்திய கிரிக்கெட் அணி வீர்ர்கள் இரங்கல்

சனி, 24 ஆகஸ்ட் 2019 (20:13 IST)
முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மூச்சு திணறல் காரணமாக கடந்த 9ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமாகிக்கொண்டே போனது.  இந்நிலையில் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் காலமானார். அவருக்கு வயது 66 ஆகும்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அருண் ஜெட்லி இன்று காலமானார். இன்று மதியம் 12.07 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. 
 
அவரது மரணம் பாஜகவிற்கு பெரிய இழப்பாக பார்க்கப்படும் நிலையில் கட்சிக்கு அப்பாற்பட்டு தலைவர்கள் பலர் அருண் ஜெட்லி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் அணிவீரர்கள் , இன்றைய மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.  அருண் ஜெட்லி  டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராகவும் , பிசிசிஐ துணைத்தலைவராகவும் பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஓய்வு முடிவைத் திரும்பப்பெற்ற ராயுடு – இந்திய அணியில் இடம் கிடைக்குமா ?