ஆஸி அணியின தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் ஷேன் வார்னின் இறுதி சடங்கில் கலந்துகொள்வேன் எனக் கூறியுள்ளார்.
உலகிலேயே மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வார்னே(52) சமீபத்தில் தாய்லாந்து சென்றதாகவும் அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
ஷேன் வார்னின் இந்த திடீர் மறைவு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் ஆகியோரை மீளாத்துயரில அழ்த்தியுள்ளதும். பலமுன்னாள் வீரர்களும் ஷேன் வார்னுடனான தங்கள் நினைவுகளை பகிர்ந்து தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆறு நாட்களாக தாய்லாந்தில் வைக்கப்பட்டு ஷேன் வார்னின் உடல் இன்று ஆஸ்திரேலியாவுக்கு தன் விமானம் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. அங்கு அடுத்த வாரம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கான அஞ்சலி நிகழ்வும், பொது நினைவஞ்சலி வரும் 30 ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வார்னின் இறுதி சடங்கில் கலந்துகொள்வது பற்றி தற்போது பாகிஸ்தானில் இருக்கும் ஆஸி தொடக்க ஆட்டக்காரர் வார்னர் பதிலளித்துள்ளார். அதில் ஷேன் வார்ன் இறந்துவிட்டார் என்பதை இப்போது வரை நம்ப முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். நான் 100 சதவீதம் அவரின் இறுதி சடங்கில் கலந்துகொள்வேன் எனக் கூறியுள்ளார்.