Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்.. டேவிட் வார்னர் திடீர் விலகல்..!

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2023 (18:02 IST)
இந்தியாவுக்கு எதிராக நடக்கும் டி20 தொடரிலிருந்து விலகுவதாக ஆஸ்திரேலியா அணியின் சீனியர் வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டிசம்பர் முதல் வாரம் தொடங்குகிறது. இந்த நிலையில் இந்த போட்டிக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் டேவிட் வார்னர் இந்த போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் தான் நாடு திரும்ப விரும்புவதாகவும், அதனால் அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து வார்னருக்கு பதிலாக ஆரோன் ஹார்டி ஆஸ்திரேலியா அணியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் விளையாடும் இரு அணி வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு:


ஆஸ்திரேலியா: மேத்யூ வேட் (கேப்டன்), ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப், அபோட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்க்லிஸ், ஸ்பென்சர் ஜான்சன், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஸாம்பா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். கடைசி இரண்டு டி20 போட்டிகளில் ஸ்ரேயஸ் ஐயர் அணியில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரன் எடுக்க ஓடும்போது மோதிய கார்ஸ்.. டென்ஷன் ஆன ஜடேஜா.. காரசாரமான வாக்குவாதம்..!

94க்கு 7 விக்கெட்.. ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஜடேஜா.. தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

பென் டக்கட் விக்கெட் விழுந்ததும் ஆவேசம்.. முகமது சிராஜுக்கு அபராதம்: ஐ.சி.சி. அறிவிப்பு.!

பி.பி.எல்2 : வில்லியனூர் அணி அதிரடி ஆட்டம்; ஊசுடு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு..! விக்கெட்டை வீழ்த்தி டக்கெட்டை சீண்டிய சிராஜ்! அபராதம் விதிக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments