இனிமேல் ஐதராபாத் அணிக்காக ஆடமாட்டேன்… ஆனால் ஆதரவு அளியுங்கள் – டேவிட் வார்னர்!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (09:58 IST)
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் டேவிட் வார்னர் கடந்த சில போட்டிகளாக கட்டம் கட்டப்பட்டு வருகிறார்.

தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று தன் கேப்ட்னசியில் கோப்பையும் பெற்றுக் கொடுக்க வைத்தார் டேவிட் வார்னர். ஆனால் கடந்த சில சீசன்களாகவே அவருக்கும் அணி நிர்வாகத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றியுள்ளது.

இந்நிலையில் இப்போது புதிய கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் வார்னர் அணியில் இருந்து ஓரம் கட்டப்படுகிறார். நேற்றைய போட்டியிலும் அவர் விளையாடவில்லை. மைதானத்திலும் அவரை எங்குமே காணாதது குறித்து ரசிகர் ஒருவர் ‘யாராவது டேவிட் வார்னரை பார்த்தீர்களா?’ என டிவீட் செய்திருந்தார். அதற்கு டேவிட் வார்னர் ‘இனிமேல் என்னைப் பார்க்க முடியாமல் கூட போகலாம். ஆனாலும் அணிக்கு ஆதரவு தெரிவியுங்கள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா கொடுத்த டார்கெட்.. யாருக்கு வெற்றி?

8 விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணி.. ஜாம்பா, பார்ட்லெட் அபார பந்துவீச்சு..!

அடுத்தடுத்து 2 போட்டிகளில் முதல்முறையாக டக்-அவுட்.. ஓய்வு பெறுகிறாரா விராத் கோஹ்லி?!

மீண்டும் விராத் கோஹ்லி டக் அவுட்.. நிதானமாக விளையாடும் ரோஹித் சர்மா.. இந்தியா ஸ்கோர்..!

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா எடுத்த அதிரடி முடிவு.. தொடரை இழக்காமல் தடுக்குமா இந்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments