என் தலைவன் தோனி ஒருவர் போதும்: சிஎஸ்கே அணியின் சிஇஓ பேட்டி

Webdunia
திங்கள், 7 செப்டம்பர் 2020 (16:39 IST)
சிஎஸ்கே அணியில் இருந்து எத்தனை வீரர்கள் விலகினாலும் என் தலைவன் தோனி ஒருவர் அணியை காப்பாற்றுவார் என்று சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விசுவநாதன் அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்
 
இந்த ஆண்டு சிஎஸ்கேக்கு பெரும் சோதனையாக இருக்கும் என்றும் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன்சிங் ஆகிய இருவரும் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி விட்டதாகவும் மேலும் ஒரு சில வீரர்கள் கொரோனாவால் பாதித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் சிஎஸ்கே அணியை தல தோனி எப்படி வழி நடத்துவார்? என்ற ஒரு கேள்விக்குறி எழுந்துள்ளது
 
ஆனால் இந்த செய்திகள் குறித்து பேட்டியளித்த சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விசுவநாதன் அவர்கள் ’என் தலைவன் தோனி ஒருவர் போதும். அவருக்கு இருக்கும் வீரர்களை வைத்து எப்படி அணியை திறமையாக வழிநடத்திக் கொண்டு செல்வது என்பது தெரியும். திறமையான கேப்டன் தோனி இருக்கும்போது எனக்கு எந்தவித கவலையும் இல்லை. கண்டிப்பாக அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்வார்’ என்று கூறினார்.
 
மேலும் சென்னை அணி வீரர்கள் தற்போது பயிற்சியை தொடங்கி விட்டார்கள் என்றும், அனைவரும் துடிப்புடன் இருக்கிறார்கள் என்றும், கண்டிப்பாக இந்த முறை சிஎஸ்கே அணி கோப்பையை வெல்லும் என்று அவர் கூறினார் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

மூன்று ஆண்டுக்கு பின் மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் வாட்சன்.. எந்த அணியின் பயிற்சியாளர்?

ஐபிஎல் 2026 சீசனில் RCB அணிக்கு வேறு home மைதானமா?... பரவும் தகவல்!

விவாகரத்துக்கு பின் பயந்து நடுங்கினேன்.. சானியா மிர்சாவின் அதிர்ச்சி பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments