Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிக்கு இனி சோதனை காலம் தான்: எச்சரிக்கும் மைக்கேல் கிளார்க்!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2017 (12:38 IST)
இந்திய அணி கேப்டன் கோலிக்கு இனி உண்மையான சோதனை காலம் துவங்கிவிட்டதாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.


 
 
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. புனேவில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி, படுதோல்வியை சந்தித்தது. 
 
இதுகுறித்து கிளார்க் கூறுகையில், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி, மிகச்சிறப்பாக செயல்பட்டது. என்னைப் பொறுத்தவரையில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு உண்மையான சோதனைக்காலம் துவங்கிவிட்டது. இதில் இருந்து அவரே தான் மீண்டு வரவேண்டும். 
 
மேலும், இதுவரை அவரது தோளில் தான் இந்திய அணி வென்றது என்பது தற்போது தெளிவாகிவிட்டது. இனி அவருக்கு வீரர்களின் ஆதரவு தேவை. உலகில் வெற்றிகரமாக இருந்த எல்லா கேப்டன்களும் இதையே தாரகமந்திரமாக வைத்து வெற்றி பெற்றுள்ளனர். எனவே, கோலியும் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என கிளார்க் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! அஸ்வின், பும்ராவுக்கும் சிறப்பு விருது!

சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் எவை? - ரவி சாஸ்திரி, ரிக்கி பாண்டிங் கணிப்பு!

இங்கிலாந்துக்கு சான்ஸ் கிடைச்சா இந்தியா செஞ்சதையே செஞ்சிருப்பாங்க! - மைக்கெல் வாகன்!

கோலிக்கு வெள்ளித்தட்டு கொடுத்த கௌரவித்த டெல்லி கிரிக்கெட் வாரியம்!

துபேவுக்கு பதில் ராணாவா?... அதிருப்தியை பதிவு செய்த இங்கிலாந்து கேப்டன் பட்லர்!

அடுத்த கட்டுரையில்
Show comments