Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூசுப் பதானை அடுத்து இர்பான் பதானுக்கும் கொரோனா தொற்று உறுதி!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (11:42 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாலையோர பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் ஓய்வு பெற்ற வீரர்கள் சச்சின், யூசுப் பதான், பத்திரிநாத் உள்பட பலர் விளையாடினார் என்பதும் தெரிந்ததே
 
இந்த தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட சச்சின் டெண்டுல்கர், யூசுப் பதான், பத்ரிநாத் உள்ளிட்டோருக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
 
இந்த நிலையில் யூசுப் பதானை அடுத்து அவரது சகோதரர் இர்பான் பதானுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரும் தன்னை தனிமைப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடைமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்றும் அதனால்தான் அந்த போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காபா மைதானத்தைப் பார்த்து நாங்கள் பயப்படமாட்டோம்… ஷுப்மன் கில் தடாலடி!

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக நடக்கப் போகும் இரண்டு மாற்றங்கள்!

காபா டெஸ்ட்டில் மீண்டும் அணிக்குள் திரும்பும் ஜோஷ் ஹேசில்வுட்!

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ராஜினாமா செய்த ஜேசன் கில்லஸ்பி!

ஷமி ஆஸ்திரேலியா செல்ல மாட்டாரா?... ரசிகர்களை ஏமாற்றிய அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments