மும்பை வந்து சேர்ந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி… தீராத குழப்பம்!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (09:07 IST)
டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக மும்பைக்கு வந்து சேர்ந்துள்ளது.

எல்லா சீசன்களிலும் கடைசி அணியாக வந்து கொண்டிருந்த டெல்லி அணி கடந்த சீசனில் இறுதிப் போட்டிவரை சென்றது. அதற்கு முக்கியக் காரணம் அந்த அணியில் புதிய இளம் வீரர்கள் புகுத்த்தப்பட்டது, ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் பதவியை ஏற்றதும்தான். அந்த அளவுக்கு சிறப்பாக அணியை வழிநடத்தினார் ஸ்ரேயாஸ்.

இந்நிலையில் இந்த ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து அவர் ஐபிஎல் தொடர் முழுவதும் நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவர் பீல்டிங்கின் போது காயமடைந்தார். தோள்பட்டையில் எலும்பு இடம் மாறியதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இதனால் அவர் சில மாதங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டியுள்ளது. ஸ்ரேயாஸின் நீக்கம் டெல்லி அணிக்கு மிகபெரும் பின்னடைவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் அணியை யார் வழிநடத்தப் போகிறார்கள் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இப்போது டெல்லி அணி ஐபிஎல் தொடரில் கலந்துகொள்வதற்காக மும்பைக்கு வந்து சேர்ந்துள்ளது. ஆனால் இன்னமும் அந்த அணியின் கேப்டன் யார் என்று அறிவிக்கப்படவில்லை. அந்த அணியின் அஸ்வின், சஞ்சு சாம்சன் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments