Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரா ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளில் கலந்து கொள்வதற்கான தேர்வில் குளறுபடி! மாற்றுத் திறனாளியான சர்வதேச வாள் வீச்சு வீராங்கனை புகார்...

J.Durai
வியாழன், 21 மார்ச் 2024 (08:29 IST)
கோவை உருமாண்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் தீபீகா ராணி,மாற்றுத் திறனாளியான தீபீகா, இந்திய பாராலிம்பிக் கமிட்டி சார்பாக சென்னையில் நடந்த தேசிய அளவிலான வீல் சேர் வாள் வீச்சு  போட்டியில் தங்கம், வெள்ளி வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
 
இந் நிலையி்ல், கோவை மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்துக்கு மனு ஒன்றை அளிக்க  வீல் சேரில் வந்த, மாற்றுத்திறனாளி  தீபிகா ராணி செய்தியாளர்களிடம் பேசினார்.
 
அப்போது பேசிய அவர்:
 
தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பாரா ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளில் கலந்து கொள்வதற்கான வீரர்,வீராங்கனைகளை தேர்வு செய்வதில் குளறுபடிகள் நடப்பதாக கூறினார்.
 
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவே மனு அளிக்க வந்துள்ளதாக கூறினார்.
 
சமீபத்தில் நடந்த ஏசியன் கேம்ஸ் போட்டிகளுக்கு முறைப்படி தகுதி தேர்வு நடைபெறவில்லை என குற்றம் சாட்டிய அவர்,உலக தரவரிசையில் 49 வது இடத்தில் இருக்கும் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என வேதனை தெரிவித்தார்.
 
இது போன்று பல திறமையான  வீர்ர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவநாக கூறிய அவர்,சரியான தகவல்களை மத்திய மாநில  விளையாட்டு ஆணையங்கள் வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்ட அவர்,பல திறமையான வீரர்கள் இருந்தும் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததால், வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக கூறினார்.
 
இதை அரசு கவனத்தில் கொள்ளும் பட்சத்தில்   சர்வதேச அளவில் இன்னும் பல திறமையான மாற்றுத்திறனாளி வீரர்கள் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்…

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிற்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

ஆசியக் கோப்பைத் தொடரில் இவர்கள் இருவரும் இல்லை.. வெளியான லேட்டஸ்ட் தகவல்!

இதனால்தான் ரிஷப் பண்ட்டுக்கு டெஸ்ட் கேப்டன் பதவி கொடுக்கப்படவில்லையா?... வைரலாகும் தகவல்!

பொறுப்புக் கொடுத்தால் எப்படி செயல்பட வேண்டுமென நிரூபித்துவிட்டார்- கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் !

ஒரு நாள் போட்டிகளிலும் ஓய்வா?... ரோஹித் ஷர்மா அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments